Thursday 15 December 2011

"ரூ.200 கட்டினால் 50 ஆயிரம் கடன்" : பொதுமக்கள் சிறைவைத்த அறக்கட்டளை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் படூர்குழி பகுதியை மையமாக கொண்டு அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், தங்களிடம் ரூ.200 கட்டினால் 3 மாதத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 18 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அணுகியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு ஊராட்சியில் ஒரு மண்டபத்தை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்த குழுவை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் லோன் தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மக்களை ஊராட்சி மன்ற மண்டபத்துக்கு வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் ரூ.200 முதல் 300 வரை வசூல் செய்துள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த ரசீதில் உள்ள பதிவு எண்கள் பலவிதமாக இருந்தது. போன் எண்ணும் இல்லை.
இதுகுறித்து மக்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 4 பேரையும் மண்டபத்திலேயே சிறைபிடித்தனர்.
தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் அவர்கள் வந்த காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது தாங்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 comment:

  1. Yeamaarupavan irunthaal...yeamaattrupavanukku easy thaaney iyya...

    ReplyDelete