Thursday, 15 December 2011

தந்தை & மகன் கைது : 3 கோடி திருடி சொந்தமாக கல்வி அறக்கட்டளை

வேலை செய்த அறக்கட்டளையில்
திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசா�ரதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத் தார். அதில், அய்யப்பன்தாங்கலில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தேன். இங்கு காந்தி என்ற முத்துகிருஷ்ணன்(55), அவரது மகன் விஜயகுமார் (33) ஆகியோர் வேலை செய்து வந்தனர். 
இந்நிலையில் அறக்கட்டளை வரவு& செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ 3,40,88,517 மோசடி செய்து திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து காந்தி, விஜயகுமாரிடம் விசாரித்தால் முறை யான பதில் அளிக்க வில்லை. மேற்கொண்டு விசாரித்ததில் என்னுடைய கல்வி அறக்கட்டளை பணத்தை மோசடி செய்து திருடி காந்தி தன்னுடைய பெயரில் பல்வேறு இடங்களில் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி விட்டார். இதற்கு அவரது மகன் விஜயகுமார் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் தலைமையில் எஸ்ஐக்கள் காளிதாஸ், கோபாலகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த காந்தி, விஜயகுமாரை நேற்று போலீசார் அய்யப்பன் தாங்கல் வழியாக வெளியூர் தப்ப முயன்றபோது கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சைதாப்பேட்டை குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment