வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி பெண் மனு
மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் வேலுச்சாமி, நடிகர் ராஜ்கிரணிடம் முதலில் பணியாற்றினார். அப்போது நடிகர் வடிவேலுவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், வடிவேலுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வடிவேலுவிடம் மேனேஜராக வேலைக்கு சேர்ந்த என் கணவர், 2009ல் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை செய்யாமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர். இதில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உள்துறை செயலர், டிஜிபிக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி 1 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன், அரசு சார்பில் வக்கீல் ராஜேஸ்வரன் ஆஜரானார். (tamil murasu)
No comments:
Post a Comment