ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கோயில்களின் உண்மையான சொத்து கணக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து நீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களை தவிர்த்து, மற்ற அனைத்து கோயில்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வருமானத்தின் அடிப்படையில் கோயில்கள் வகைப்படுத்தப்பட்டன. ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்துக்கும் மேல் வருமானம் உளள 7 கோயில்கள் 6&எ எனவும், அதற்கு குறைவான வருமானம் உள்ள 33 கோயில்களை 6&பி எனவும், இதை விட குறைவான வருமானமுள்ள கோயில்களை 6&சி எனவும், 33 மடங்கள் 6&டி எனவும் வகை பிரிக்கப்பட்டுள்ளன. 3,073 கோயில்களில் 161 மட்டுமே இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவை தர்மகர்த்தாக்கள், பரம்பரை தர்ம கர்த்தாக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் மொத்தம் 103.321 கிலோ தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 26.50 கோடி. மேலும், 15,068 கிலோ 330 கிராம் வெள்ளி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8.50 கோடி.
இதில், திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி சிவன் கோயிலுக்குதான் அதிக சொத்துகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கோயிலுக்கு 30 கிலோ தங்கமும், 13,809 கிலோ வெள்ளியும் உள்ளன.
No comments:
Post a Comment