Friday, 16 December 2011

உயர் நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு : அறிக்கையில் குட்டிகரணம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொண்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்ப டாது என்றும் நில நடுக்கம் காரண மாக அணை உடைந்தால் கூட அதிலிருந்து வெளி யேறும் தண்ணீ ரை இடுக்கி, குள மாவு, செருதோணி ஆகிய அணை கள் தாங்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், அரசு சார்பில் வேறொரு அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும� இதற்காக 4 பேர் அடங்கிய அமைச்சரவை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அட்வகேட் ஜெனரலின் கருத்துக்கு நேர் எதிரான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களை பாதிக்கும். அணை யில் 136 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் கூட பாதுகாப்பு இல்லை. அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை தாங்கும் சக்தி இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளுக்கு கிடையாது. ஏனென்றால் இந்த இரு அணைகளுக்கும் மதகு இல்லை. குளமாவு அணை க்கு மட்டுமே மதகு உள்ளது. முல்லை பெரியாறு அணை யில் நடைபெற்ற பலப்படுத்தும் பணிகள் போதுமானதாக இல்லை. அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment