Friday, 16 December 2011

கருங்கலில் 23-ல் லிம்கா சாதனைக்காக 1500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவையின் இணையதளம் தொடக்கவிழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ தலைமை வகித்தார். இணையத்தளத்தை அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா, டாக்டர் சுமித்ரா, கான், ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜேசர் ஜெபநேசர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி வருகிற 23ம் தேதி கருங்கலில் நடக்கிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொள்கின்றனர். விசாகபட்டினத்தில் கடந்த 2009ம் ஆண்டு 1008 கிறிஸ்துமஸ் தாத்தா ஒன்று கூடியதே லிம்கா சாதனை யாக உள்ளது. லிம்கா சாதனைக்காக இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி நடத்துகிறோம். பேரணி கருங்கல் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் இருந்து தொடங்கி கருங்கல் பஸ் நிலையத்தில் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் குமரிமாவட்டத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழு போட்டியும் நடத்தப் பட்டு பரிசு வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஐக் கிய இளைஞர் பேரவை தலைவர் காட்வின், பொரு ளாளர் ராபின், சட்ட ஆலோ சகர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment