Friday 16 December 2011

முதல்வர் பதவியை தராவிட்டால் : பாஜ தலைவரிடம் எடியூரப்பா மிரட்டல்

கர்நாடகாவில் விபரீதம் நடக்கும்
கர்நாடக பாஜ.வில் தனக்கு ஆதரவாக 72 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இவர் மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வர் பதவி அல்லது மாநில பாஜ தலைவர் பதவி பெறுவதில் குறியாக இருக்கிறார். அதே நேரம், "எனக்கு பதவி ஆசையில்லை. கர்நாடகாவில் கட்சியை வழி நடத்துவது பற்றியும், மேலவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்க டெல்லி வந்தேன்" என்று எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் கட்கரியை சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தும் பதவியில் நீடிக்கிறார்கள். எனவே, மீண்டும் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்." பதவி வழங்காத நிலையில் கட்சியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன். இதனால் கர்நாடக பாஜ.வில் விபரீதங்கள் ஏற்படும்� என்று எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியையும் எடியூரப்பா சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, அத்வானியிடம் எடியூரப்பா தனது கோரிக்கை குறித்து விளக்கி கூறினார். இந்த சந்திப்பின்போது 10 எம்.பிக்கள் உடன் இருந்தனர். தனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்கரியிடம் எடியூரப்பா கொடுத்துள்ளார். (Dinakaran)

No comments:

Post a Comment