விளைச்சல் அதிகரிப்பால் பருப்பு மற்றும் கொத்தமல்லி, பூண்டு, அரிசி விலை குறையத் தொடங்கியுள்ளது. பருப்பு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நல்ல விளைச்சல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கப்பல்களில் இறக்குமதி போன்ற காரணங்களால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ துவரம் பருப்பு ரூ 70க்கு விற்கப்பட்டது ரூ 60க்கும், தான்சினியா துவரம் பருப்பு ரூ 55 லிருந்து ரூ 45 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது. மேலும், உளுந்தம் பருப்பு ரூ 70 லிருந்து ரூ 60க்கும், உளுந்தம்பருப்பு(பர்மா), ரூ 65 லிருந்து ரூ 55க்கும், பாசிப்பருப்பு ரூ 75 லிருந்து ரூ 65க்கும்; 2ம் ரகம் ரூ 60 லிருந்து ரூ 50க்கும், கடலைப்பருப்பு ரூ 60 லிருந்து ரூ 54க்கும்; 2ம்ரகம் ரூ 55லிருந்து ரூ50க்கும் விற்கப்படுகிறது. புது வரவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் இந்த விலை வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் கர்நாடகா, ஓசூர் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் புளி முதல் ரகம் கிலோ ரூ 130 லிருந்து ரூ 110; 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80க்கும், வத்தல் முதல் ரகம் ரூ 200 லிருந்து ரூ 160க்கும், 2ம் ரகம் ரூ 170லிருந்து ரூ 120க்கும், கொத்தமல்லி ரூ 70லிருந்து ரூ 60க்கும், மலைப்பூண்டு ரூ 130 லிருந்து ரூ 100க்கும், நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ 140லிருந்து ரூ 110க்கும், 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூபாலி அரிசி கிலோ ரூ 20 லிருந்து ரூ19க்கும், அதிசய பொன்னி ரூ 24 லிருந்து ரூ 22க்கும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ 22லிருந்து ரூ 19க்கும்; 2ம் ரகம் ரூ 20லிருந்து ரூ 17க்கும், பாபட்லா புதுசு ரூ 26லிருந்து ரூ 24க்கும், பாபட்லா பழையது ரூ 30லிருந்து ரூ 28க்கும், வெள்ளை பொன்னி ரூ 38 லிருந்து ரூ 36க்கும், பொன்னி பச்சரிசி ரூ 22லிருந்து ரூ 20க்கும், புது பச்சரிசி ரூ 30லிருந்து ரூ 28க்கும், பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ 85 லிருந்து ரூ 80க்கும்; 2ம் ரகம் ரூ 65லிருந்து ரூ58க்கும், 3ம் ரகம் ரூ 50லிருந்து ரூ 43 ஆகவும் குறைந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து புது அரிசி வரத் தொடங்கியுள்ளதாலும், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செங்கல்பட்டு, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாகவும் அரிசி விலை குறைந்துள்ளது. அடுத்தவாரம் இந்த விலை கிலோவுக்கு ரூ 3 வரை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment