களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லுக்கட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களியக்காவிளையில் இருந்து திட்டங்கனாவிளை, தாரப்பழஞ்சி, அதங்கோடு, காப்புக்காடு, நட்டாலம் வழியாக நாகர்கோவில் வரையும் அளவீடு செய்யப்பட்டு ள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக புறவழிச்சாலை அமையும் போது 500க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு என்.எச்.47ல் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் அரசிடம் இருந்து இழப்பீடு பெற பூத்துறையை அடுத்த கல்லுக்கெட்டியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்புத்துறை அலுவலகத்திற்கு தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணத்துடன் அலுவகத்திற்கு வந்தனர்.
அப்போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறவழிச்சாலைக்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் என்.எச். 47 பாதுகாப்பு நடவடிக்கை குழு தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலீப், லெட்சுமி நாரா யணன், புறவழிச்சாலை நலச்சங்க தலைவர் ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றதை அடுத்து நெல்லையில் இருந்து வந்த சிறப்பு தாசில்தார் மற்றும் அதி காரிகளிடம் இழப்பீட்டு நடவடிக்கைக்காக தங்கள் நில ஆவணங்களை காண்பித்தனர். (Dinakaran)
No comments:
Post a Comment