தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல் மஜீத், மாநில தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் இரா.தாஸ், பொருளாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர். மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மக்களின் துயரங்களை போக்க நிவாரண நிதியாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தவிர அனைத்து மாவட்ட இயக்க உறுப்பினர்கள் தங்களின் ஜனவரி மாத ஒரு நாள் சம்பளத்தை மாத ஊதியத்தில் இருந்து கொடுக்க முன்வந்துள்ளனர்.
உதவி தொடக்க கல்வி அலுவலரின் நிர்வாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, நிதி உதவி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அரசின் நிவாரண நிதிக்கு வழங்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment