கூடங்குளம் விவகாரம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில் ‘கூடங்குளம் அணுமின் நிலையம் & ஒரு யதார்த்த பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. மாநிலக்குழு தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஆதீனம் நூலை வெளியிட, கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய நிபுணர் குழுத்தலைவர் டட்கின் வெவ்ஜின் பெற்றுக்கொண்டார்.
பின்னர் டட்கின் வெவ்ஜின் நிருபர்களிடம் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், சிலர் தன்னைத்தானே தலைவராக நியமித்துக்கொண்டு, மக்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்படி தடுப்பது, இந்திய நாட்டின் வளர்ச்சியை தடுப்பதாகும். நாங்கள், இந்திய மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். விரைவில் கூடங்குளம் அணுஉலை செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி, பணியை ஆரம்பித்தாலே முழுமையாக செயல்பட 5 மாதம் ஆகும். டிசம்பரில் ஆரம்பிக்க வேண்டிய வேலை இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழக அரசு இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் அணு மின்நிலையத்துக்குமக்கள் ஆதரவு அதிகம் உள்ளது,” என்றார்.
‘இதேபோல், ரஷ்யாவில் நடந்திருந்தால்’ என கேட்டதற்கு, “முதலில் நடுரோட்டில் உட்கார அரசு அனுமதி கொடுத்திருக்காது. பணி, ஆரம்ப கட்டத்திலேயே மக்கள் விருப்பம் கேட்டு, அமைத்திருப்போம். மக்கள் தொடர்பு மையம் ஆரம்பித்து, நாடு முழுவதும் மக்கள் கருத்து கேட்டு ஆரம்பித்திருப்போம். புகுஷிமாவுடன், கூடங்குளத்தை ஒப்பிடுவது சரியாகாது,” என்றார்.
No comments:
Post a Comment