Wednesday, 18 January 2012
Saturday, 14 January 2012
ஓட்டலில் உணவு விலையை கட்டுப்படுத்த வேண்டும் : தோசை ரூ 45, சாப்பாடு ரூ 60
கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
நாகர்கோவிலில் சமீப காலமாக ஓட்டல்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல ஓட்டல்களின் விலைப்பட்டியல் வைப்பதில்லை. பண்டங்களை ஈக்கள் மொய்க்காமலும், தூசுகள் படியாமலும் மூடி வைப்பதில்லை. பெரும் கலப்படங்கள் நடைபெறுகிறது.
கொழுப்பை கரைக்கும் அக்ருட் : ஆராய்ச்சி தகவல்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ருட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.
மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் : அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கேட்டு வழக்கு
கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி. ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ பிரிவு கள், 11 அரசு மருந்தகங்கள், 7 பெண்கள் மற்றும் குழந் தைகள் மருத்துவமனைகள், 4 காசநோய் மருத்துவ மனை கள் மற்றும் 7 தொழுநோய் மருத்துவமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். சமுதாயத்திற்கு சேவையாற்றும் பொறுப்பு இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உள்ளது.
ரஞ்சி கோப்பை : பைனலில் தமிழகம்
தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் : தென் மண்டலம்
தென் மண்டல அஞ்சல் துறையின் கீழ் உள்ள 733 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேவையும் துரிதமாக நடைபெறும்.
தபால் பட்டுவாடா, பதிவு தபால் போக்குவரத்து, பார்சல் தபால் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, மணியார்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை செய்து வருகிறது.
3 சிறுமிகளை காப்பாற்றிய தர்மபுரி மாணவனுக்கு தேசிய விருது
![]() |
| R. Sudhakar, Superintendent of Police, handing over a cash prize to G. Parameswaran |
தர்மபுரி அருகே குளத்தில் தத்தளித்த மூன்று சிறுமிகளை காப்பாற்றிய 9ம் வகுப்பு மாணவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இதை பிரதமர் வழங்குகிறார்.
தர்மபுரி மாவட்டம் அரகாசனஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரமேஸ்வரன்(14). இவர் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18.09.2010 அன்று நாகாவதி அணையின் கால்வாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை
சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 31.12.2011 தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Friday, 13 January 2012
Windows XP -ல் போல்டரை மறைத்து வைப்பது எப்படி???
உங்கள் கம்ப்யூட்டரில் (computer) ஒரு போல்டரை மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைத்து வைப்பது ( It has been tried in windows XP by me)
- உங்கள் கம்ப்யூட்டரில் D டிரைவில் (drive) "xyz" என்ற போல்டெர் (Folder) இருப்பதாக எடுத்து கொள்வோம்.
- கம்ப்யூட்டரில் (computer) Start Menu => All Programs => Accessories => Command Prompt ஐ துவக்கவும்
- இங்கே டைப் செய்திருப்பது போலே டைப் செய்யவும் ( attrib +s +h D:\xyz ) ** () இல்லாமல் டைப் செய்யவும்
- இப்போது உங்கள் போல்டெர் (Folder) மறைந்து போயிருக்கும். நீங்கள் அந்த போல்டரை மறைக்க பட்ட பைல், போல்டரை (hidden files and folders) காணும் முறை கொண்டும் காண முடியாது.
- உங்கள் போல்டரை (Folder) திரும்ப கொண்டு வர இங்கே டைப் (type) செய்திருப்பது போலே டைப் (type) செய்யவும் ( attrib -s -h D:\xyz ) ** () இல்லாமல் டைப் செய்யவும்
- இது போன்று உங்கள் கம்ப்யூட்டரில் (computer) இருக்கும் எந்த ஒரு போல்டரையும் நீங்கள் மறைத்து வைக்கலாம்.
பொங்கலுக்கு 5000 ஸ்பெஷல் பஸ்
பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் மொத்தம் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
Thursday, 12 January 2012
அமெரிக்க தூதரக ஆபீசில் தமிழ், இந்தி, மலையாளதில் விசாரணை
இந்திய, அமெரிக்க தொழில் வர்த்தக சபை சார்பில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கோலஸ் மேன்ரிங் பேசிய தாவது:
உலகில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சென்னையில் உள்ள தூதரகம் 10&வது மிகப்பெரிய தூதரகமாகும். கடந்த ஆண்டு மட்டும் இங்கு 1.75 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது.
பூனையை புலி என கூறி ரூ 10 லட்சத்துக்கு பேரம்
உடம்பில் வரிகள் கொண்ட காட்டு பூனையை, புலி என கூறி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடி வனப்பகுதியில் சிலர் புலிக்குட்டியை விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்றனர். சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரிடம் நைசாக பேச்சு கொடுத்தபோது, தங்களிடம் புலிக்குட்டி இருப்பதாகவும்,
1,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : நிர்ணயிக்கப்பட்டகுறைந்தபட்ச இடவசதி
மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச இடவசதி இல்லாத 1,000 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை தொடங்கி நடத்த அரசு குறைந்தபட்ச நில அளவை நிர்ணயித்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் 33 சென்ட், நகராட்சி பகுதியில் 1 ஏக்கர், பேரூராட்சி பகுதியில் 2 ஏக்கர், ஊராட்சி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மாதத்தில் உற்பத்தி தொடக்கம்
பணம் தின்னும் ஆம்னி பஸ்கள் : அரசு கண்காணிக்குமா???
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக வசூல் வேட்டை தொடங்கியிருக்கிறது.
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் மற்றும் கோயில் திருவிழா காலங்களில், சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ரயில் மீது குண்டுவீச்சு, பஸ் போக்குவரத்து முடங்கியது : தென் மாவட்டங்களில் பதற்றம்
பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
Wednesday, 11 January 2012
அஞ்சுகிராமம் அருகே விளக்கு தவறி விழுந்து பயங்கர தீ குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
அஞ்சுகிராமம் அடுத்த மகாராஜபுரம் அருகே உள்ளது ஹரிதாசபுரம் கிராமம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் சுமார் 25 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனை வரும் கூலி தொழிலாளர்கள். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் இரு மகன்கள் செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன் தினம் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றனர். மகன்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்ற பிறகு செல்லத் துரை மனைவி செல்ல ராணி தனது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தார். விளக்கு அணை யாமல் இருக்க அதிக எண் ணெய் ஊற்றப்பட்டு இருந்தது.
Subscribe to:
Posts (Atom)























