Friday, 2 March 2012
Thursday, 1 March 2012
ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி
Tuesday, 28 February 2012
மீனவர்களை சுட உத்தரவிட்டது யார்? சிக்கலில் இத்தாலி கடற்படை
கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 11 மீனவர்களுடன் வழக்கம்போல ஒரு மீன்பிடிப் படகு கடலுக்கு சென்றது. குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான "செயின்ட் ஆன்டனீஸ்" என்ற இந்தப் படகில் இரயுமன்துறையைச் சேர்ந்த அஜீஷ் பிங்கு, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் இருந்தனர். 15ம் தேதி கரைக்கு திரும்ப திட்டம். ஆனால் அன்று மாலை 4.30 மணியளவில் படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் அஜீஷ் ஆகியோர் இத்தாலி கப்பல் வீரர்களால் சுடப்பட்டனர்.
Saturday, 25 February 2012
Friday, 24 February 2012
Thursday, 23 February 2012
அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி
மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.
Wednesday, 22 February 2012
Tuesday, 21 February 2012
நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
Saturday, 18 February 2012
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)























