Wednesday, 1 February 2012

கூவத்தில் விழுந்த முதியவரை ஷூ கயிற்றால் காப்பாற்றிய தலைமைக் காவலர்


தலைமைக் காவலர் ரவி
அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், நேற்று அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

Tuesday, 31 January 2012

"நல்லவர்களை கெடுக்கும் கோபம்" : படித்ததில் பிடித்தது


ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்கள் மீதான மதிப்பு, மரியாதையை முடிவு செய்கிறது. ஒரு சிலர் இருக்கிறார்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பேசுவார்கள். எதிரில் இருக்கும் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படும்.

விந்தணு எண்ணிக்கை குறைக்க அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை

குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இயங்கிய154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கிய, 154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதியின் குடும்பத்தை காக்க சட்டீஸ்கர் அரசு புதுமை திட்டம்

கைதியின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தை பாதுகாக்க சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

"ஸ்பாட் பைன்" : 15 லட்சத்தை தாண்டியது : உஷார்!!!

ஒரே நாளில் 10,000 வழக்கு
வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ 15 லட்சத்துக்கு மேல் வசூலானது.

இந்தியா ஒளிர்கிறது : பார்ட்டிக்கு போக வசதியாக நள்ளிரவு குழந்தை காப்பகம்

ஒரு இரவு பராமரிக்க ரூ 750
வாரஇறுதி நாட்களில் கைக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

Monday, 30 January 2012

பணகுடி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பிவிட்ட டிரைவர் : உஷார்!!!

பல பெண்களை ஏமாற்றினாரா?
இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வேன் டிரைவர் அதை செல்போனில் ஊரெல்லாம் பரப்பி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரை ‘வேறொரு’ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம்

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம் என மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த விழாவில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

காதல்??? இது மோகம்!!! : வாழ்க்கை வாழ்வதற்கே : 2 திருமணங்கள் முடித்தவருடன் காதல்

காதல் : கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து பலியானது ஏன்?
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நேற்று முன் தினம் காலையில் மூதாட்டி, இளம்பெண் ஆகியோர் அடுத்தடுத்து ரயில்களில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் தாய், மகளாக இருக்குமா? என்ற சந்தேகமும் வந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோக்சனா, பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

வேலை நிறுத்தம் : டாக்டர்கள் கையை வெட்டுவேன்

வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடினால், டாக்டர்களின் கையை வெட்டுவேன்” என்று பீகார் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Criminals = Politicians = Criminals : Is it TRUE?

As many as 109 candidates contesting the first phase of Uttar Pradesh Assembly elections have criminal cases pending against them, according to a monitoring group.

எச்ஐவி பாதித்தவர்கள் பட்டியல்

விழிப்புணர்வால் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்தது
வேலூரில் கடந்த ஆண்டு 1487 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் கட்டணம் 12% வரை உயர்த்தப்படலாம்


ரயில்களில் பயணிகள் கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 12% வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.

Friday, 27 January 2012

குடியரசு தின சோகம் : ‘உயிரை பறித்த சாதனை முயற்சி’

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தடுமாறி விழுந்ததில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஊட்டியில் உற்சாகமாய் தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் சோகத்துடன் முடிவடைந்தது.

பயணிகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு 1.5 லட்சம் வழங்கிய பேராசிரியர்

பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார் அரசு பஸ் டிரைவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் விபத்தில் காயமடைந்த பேராசிரியர் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் வழங்கினார்.

இன்ஸ்பெக்டர் லீலை : தக்கலையில் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனியாக இரவு ரோந்து சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் அவர் தனது லிமிட்டை தாண்டி தக்கலை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த திடீர் தடை

பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 25 January 2012

திருவட்டார் : 80 வயது மூதாட்டியை விரட்டியடித்த போலீசார்

திருவட்டார் காவல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் மருமகள் கொடுமை படுத்துவதாக தனது மற்றொரு மகனுடன் புகார் கொடுக்க வந் தார். அப்போது அங்கு இருந்த ஏட்டு ஒருவர் இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறி கடின வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பினார். அழுது கொண்டே வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நடுக்கடலில் மூழ்கிய 4 இலங்கை மீனவர்களை உயிருடன் மீட்ட வாணியக்குடி மீனவர்கள்

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு படகு கடலில் மூழ்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த ரஞ்சித் உள்பட 9 பேரும் விரைந்து சென்று அந்த படகில் இருந்த 4 பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர். அவர்களை கரைக்கு அழைத்து வருகிறார்கள்.

ஆசாரிபள்ளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : கலெக்டர் நேரடி நடவடிக்கை

அதிகாரிகளை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏ
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்ரமிப்புகளை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ராபர்ட்புரூஸ் தலைமையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் லூயிஸ், அருள்செழியன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு : மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது
"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது" என்று கேரள அமைச்சர் கே.பாபு கூறினார்.

Tuesday, 24 January 2012

நாணயம் தயாரிக்கும் மும்பை வியாபாரிகள்

சில்லரை தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த மும்பை வியாபாரிகள் பலர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்ய நாணயங்களை தயாரித்து கொள்கின்றனர்.

புத்தகப்பை, கணித உபகரண பெட்டி வழங்க அரசு உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், மேப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு 2013 மார்ச்க்குள் அடையாள அட்டை

அன்னிய ஊடுருவலை தடுப்பதற்காக 12 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.