Monday, 6 February 2012

சொந்த வீட்டிலேயே கைவரிசை : ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளை


திருவொற்றியூரில் பட்டப்பகலில் ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது மகன் மற்றும் நண்பர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் : அமெரிக்காவில் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

Sunday, 5 February 2012

கூடங்குளம் பிரச்சனை : கருப்பு கொடி ஊர்வலம் : 143 பேர் மொட்டை : 10 ஆயிரம் பேர் பங்கேற்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டக் குழுவினர் சார்பில் கூட்டப்புளியில் கருப்பு கொடி ஏந்தி நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது. 143 பேர் மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதுவெல்லாம் குற்றங்கள்? : ஸ்பாட் பைன்


எதுவெல்லாம் போக்குவரத்து குற்றங்களாகும் என்பது பற்றி விவரம்:

Saturday, 4 February 2012

‘சாதி மோதலை தூண்ட சதி’ : தினமலர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

வன்னியர் சமுதாயத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்டதற்காக "தினமலர்" ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ புகார் செய்துள்ளார்.

பேரவை தகவல் : மார்த்தாண்டம் பஸ்நிலைய பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும்

மார்த்தாண்டம் பஸ்நிலைய விரிவாக்கப்பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே நேரத்தில் இரண்டு பல்கலை.யில் படிக்கலாம்


ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கும் திட் டத்தை அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல் படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

சைதையில் கூடங்குளம் போராட்டக் குழு மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்கியதைக் கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திரு. J G பிரின்ஸ் - குளச்சல் MLA : மக்கள் பணியில்

திரு.  J G பிரின்ஸ் அவர்கள் 2011 - ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11821 வாக்குகள் அதிகம் பெற்று குளச்சல் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு வழங்கிக்கிறார். சட்டமன்றத்திலும் மக்கள் குரலாக ஒலிக்கிறார். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் தேர்வு செய்தமைக்கு நாம் மகிழ்வுற வேண்டும்.

ஜெனிலியா திருமணம் மும்பையில் நடந்தது : நடிகர், நடிகைகள் வாழ்த்து


நடிகை ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மராட்டிய முறைப்படி மும்பையில் நேற்று நடந்தது. ஏராளமான திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

நள்ளிரவு பார்ட்டியில் பிரியாமணியிடம் கலாட்டா


சிசிஎல் எனப்படும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டி இப்போது நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்போட்டி கொச்சியில் நடந்தது. இதில் இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடந்தது. 

கல்விக் கட்டணம் பிரச்னை முற்றுகிறது : மாநில அளவில் போராட்டம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய கட்டணம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கட்டணக் குழு உத்தரவிட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது.

Friday, 3 February 2012

ஒழுகினசேரி : அதிரசத்திற்குள் பல்லி : டீக்கடைக்கு சீல்

இருளப்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நேற்று மாலை தனது உறவினர்கள் சிலருடன் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் உள்ள டீக் கடையில் டீ குடித்து விட்டு அதிரசம் வாங்கி தின்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள தனது குழந்தைகளுக்கும் அதிரசம் வாங்கி சென்றுள்ளார்.

தெருஞ்சுகோங்க!!! புருஞ்சுகோங்க!!! பார்த்து நடந்துக்கோங்க!!!

ஏதாவது ஒரு எண்ணிற்கு போனை போடுவது, அதில் பெண் குரல் வந்தால் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் மன்மத ஆசாமிகள் ஒருபுறம் இருந்தாலும் செல்போன்கள் மூலம் தங்களது வாழ்க்கையை வளமாக்கும் கில்லாடி பெண்களும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தற்போது குமரியில் வேகமாக அதிகமாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் : கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன் : ஜெயலலிதா

‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத் தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்’’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இன்று கூடங்குளமும் சட்டசபையும் : அணுமின் நிலையத்தால் மின் தட்டுப்பாடு நீங்காது

சட்டசபையில் கூடங்குளம் பற்றி உறுப்பினர்கள் பேசியதாவது:

கடலரிப்பால் முள்ளூர்துறை சாலை அபாயம் : நடவடிக்கை எடுக்கப்படுமா???

தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் தொடர் கடலரிப் பால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, 2 February 2012

ஹீரோவுக்கு கை, கால் அமுக்கணும் முகத்துக்கு நேர் கால் போடுவார் ஹீரோயின்

கிழக்கு சீமையிலே, கடல்பூக்கள், தமிழ்ச்செல்வன் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ரத்னகுமார். செங்காத்து பூமியிலே என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர் கூறியதாவது:

குமரியில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண் : என்னதான் நடக்குது???

குமரியில் திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றியதாக வாலிபர் தவித்து வருகிறார்.

காதலும்!!! கருக்காடியும்

ஓர் கடலோர கவிதை                                             

பார்க்கும்
                கண்ணாடியிலும் உன் முகம்
                கருக்காடியிலும் உன் முகம்

"திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா!!!"

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

Wednesday, 1 February 2012

அவளின் கிறுக்கல்கள் - 9

போய் வருகிறேன் கண்மணி
நீண்ட காலத்துக்கு பின் என்று போகும் போது சொன்னாய் ... 
நான் போய் வருகிறேன் கண்மணி.. 
இந்த வார்த்தைகளுக்காக இரு கண் மணியும் உறங்காது...
பலநாள் தவம், கிடந்தேன் காதலா ....

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம் அழைத்து சென்று லஞ்ச பணம் வசூல் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம்மில் லஞ்ச பணம் எடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாளை முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இதில், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

திருமணம் ஓகே... குழந்தை கூடாது : நக்சலைட்கள் நிபந்தனையாம்!!!

சட்டீஸ்கர் மாநில நக்சல் இயக்கத்தில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.