கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, மதுரை, தேனி, நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் விவசாய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டு வளர்ப்பு), பி.டெக் (பயோ டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி, வேளாண்மை பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிஎஸ் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்) என 13 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கல்லூரிகளிலும் கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6 ஆகும்.Wednesday, 23 May 2012
“விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது."
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, மதுரை, தேனி, நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் விவசாய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டு வளர்ப்பு), பி.டெக் (பயோ டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி, வேளாண்மை பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிஎஸ் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்) என 13 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கல்லூரிகளிலும் கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6 ஆகும்.Tuesday, 22 May 2012
குளச்சல் : 2 மீனவர்கள் மாயம் : 2வது நாளாக தேடுகிறார்கள்
குளச்சல் அருகே மாயமான 2 மீனவர்களை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர்கள் மரியடேவிட்(36), எடிசன்(34). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் பைபர் வள்ளத்தில் கடலில் மீன்பிடிக்க
சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இருவரும் நேற்று மாலை ஆகியும் கரை திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர்.
Monday, 21 May 2012
பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : கடலூர்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் வருமானத்திற்கு ஏதுவாக கத்தரி, வெண்டை, மிளகாய் என பல்வேறு வாணிப பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய் சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். சமப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பர். குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் மேல் பகுதியில் வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். இதில் கொடியை ஏற்றி படர செய்வர். 150 நாட்கள் வரை பயன்தர கூடிய பயிராகும். 45 நாட்களில் கொடிகளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம்.அரசு பாலிடெக்னிக்குகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
அரசு பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு இன்று (21ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக்களில் முதலாம் ஆண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர பட்டய படிப்பில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (21ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு பாலிடெக்னிக் களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.தூத்தூர் பகுதி மீனவர்கள் கோஷ்டி மோதல்
தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மீது குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆன்றனி ஆரோக்கியதாஸ்(30) என்பவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் தனக்கு சொந்தமான படகை கடலுக்குள் தள்ளி கொண்டு சென்றபோது அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு மீது மோதியுள்ளது. இதில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் தங்கள் படகு மீது ஏன் மோதினாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி ஆன்றனி ஆரோக்கியதாசுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் செல்வம், சிபுநேஸ், சிலுவை அடிமை ஆகியோர் படுகாயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடபடுகிறது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் மதிப்பெண்களுடன் SMS பெற உங்கள்...பதிவு எண் :
பெயர் :
மொபைல் நம்பர் :
பதிவு செய்யவும் click here : Get your +2 result SMS to your mobile with marks
பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர்.
Saturday, 19 May 2012
மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை தேர்வு 22,884 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். பள்ளி மேல்நிலை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுது தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர்கள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது.
கோடிமுனை : ரயிலில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.
Thursday, 17 May 2012
சுப்ரீம் கோர்ட் : கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. : போலீசாருக்கு பாக்கெட் நிறையும்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘இந்தியா முழுவதிலும் மே மாதத்திலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. அதை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
கேரளா : 21 வயது ஆனவர்களுக்கு மட்டுமே மது
கேரளாவில் இனிமேல் 21 வயது ஆனவர்கள் மட்டுமே ஒயின் ஷாப்புகளில் மது வாங்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கு ரேஷன் கடைகளில் இருக்கும் கியூவை விட ஒயின் ஷாப்புகளின் முன் நிற்கும் கியூதான் அதிகமாக இருக்கும். கேரளாவில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனைக் கழகம் சார்பில் மூலைமுடுக்குகளில் கூட சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.Monday, 14 May 2012
சேலத்தில் சோகம் : சீட் பிடிக்க உயிர் போன பரிதாபம்
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ஓடும் ரயிலில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறிய 2 குழந்தைகளின் தந்தை, அவர்கள் கண் முன்னே ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க அனுமதி
ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
Sunday, 13 May 2012
ஒருதலை பட்சத்தின் விளைவுகள் : எது பெண்ணுரிமை?
கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு கடந்த 9-ம் தேதி இரவு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இ-மெயில் திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் மற்றும் திருவில்லிபுத்தூர் போலீசார் அக்கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.ஜூன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. அதில் 10,312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் முறையாக இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வு நடந்தது. இந்த முறையின் கீழ், 19,574 மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.களியக்காவிளை : இரு மாநிலங்களின் உறவை கெடுக்கும் கேரளா போலீஸின் திமிர்
களியக்காவிளை ஒற்றாமரம் சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்து துறையினர் வழங்கிய டூரிஸ்ட் அனுமதி ரசீதை கேரள போலீசார் கிழித்து எறிந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர் தலையிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
Friday, 11 May 2012
எங்கு நோக்கினும் பெண்ணுரிமை குரல் : பெண்கள் எங்கே போகிறார்கள்?
கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கப்பல் கழக ஊழியருக்கும், மும்பையை சேர்ந்த பெண்ணுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
Haryana says "NO" to Jeans and T-Shirt
Directing its field staff to wear "decent" clothes to work, the women and child department (WCD) department in Haryana has asked them to desist from wearing jeans and T-shirts to work.
The controversial order has virtually termed jeans and T-shirts as 'indecent' clothing. Its subject line read: "To wear decent clothes in office."
The circular, issued April 18, has been sent by the WCD director's office to all its field offices which run the Integrated Child Development Scheme (ICDS) and Integrated Child Protection Scheme (ICPS).
நிதானம் (பொறுமை) தேவை : நிதானத்தை இழந்தால்???
ஓடும் ரயிலில் டிக்கெட் எடுக்காத பெண் பயணியை, அபராதம் கட்ட சொன்ன பெண் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thursday, 10 May 2012
30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதிக்காத கிராமம்
சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி கிராம மக்கள், 30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதித்ததில்லை. ஆச்சரியமாக உள்ளதா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஊஞ்சம்பட்டி. சுமார் 200 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தீப்பெட்டி தயாரிப்பு மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்தபோதும், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுகின்றனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் இக்கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கின்றனர். ஊர் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்கின்றனர்."பணம் இருந்தால் கடவுளும் வீடு தேடி வருவார்"
சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
Tuesday, 8 May 2012
ஒரே டிக்கெட் : பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயிலில் பயணிக்கலாம்
பஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வர "ஒருங்கிணைந்த சென்னை மாநக போக்குவரத்து" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சிதம்பரம் பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):
302 Women on Hunger Strike to Shut Down KKNPP : Government & Media remain Blind
- Yoko Kataoka, a retired baker from Japan
Some 25 men have been on the fast since May 1 and 302 women and 10 more men have joined the strike on May 4, 2012.
Today the People of Koodankulam and Idinthakarai are going to submit the Voter ID Cards to the Radhapuram Tahsildar.
Is demanding ones right to live is a crime? These people are labelled as Naxals. Demanding the right to live become the act of Naxals.
ஹீமோபீலியா : சேலம் மாவட்டத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரண மாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ‘எக்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்’ குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபிலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும். காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும்.குமரி குடிமகன்களின் நாட்டு சேவை : ஏப்ரலில் மதுபான விற்பனை 54.35 கோடி
குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 நாட்களில் மட்டும் ரூ.54.35 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Monday, 7 May 2012
DIVORCE : Reasons and Documents
"Marriages are made in Heaven". "இறைவன் இணைத்ததை மனிதன் பிரிகாதிருக்கட்டும். இனி இவர்கள் இரு உடல் ஓர் உயிராய் இருப்பார்கள்"
Divorce is not the solution for every problem. Love has the power to cure any problem. Sharing and Understanding the problem and loving one another are the ultimate solution for every happy married life.
Divorce, though I don't support, the main reason for sharing this article is merely for knowledge and for the use of men and women, who are victims of marriage.
Subscribe to:
Posts (Atom)







