சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.Thursday, 3 May 2012
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி
சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அஞ்சல் துறையின் புதிய அவதாரம் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா"
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
தகவல் ஆணையம் தீர்ப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : உதயகுமார்
கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22-ம் தேதி வெளியாகிறது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.Sunday, 29 April 2012
380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.புதைக்கப்படும் பொக்கிஷங்கள் - பட்டை சோறு
நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.
தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.இலவச கட்டாய கல்வி உரிமை : ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பணி தேர்வுகளுக்கு இணையதளத்தில்பதிவு செய்வது எப்படி?
அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா
ஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.Thursday, 26 April 2012
புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : தூக்கணாம் குருவி கூடு
சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.
இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.
இன்று முதல் 10 - ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம்
பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.மனைவிக்காக ரூ.9,50,000 கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய முன்னாள் டிஜிபி
ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.
அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.பரத்பூர் கலெக்டர் அதிரடி : திருமண பத்திரிகையில் பிறந்த தேதி கட்டாயம்
குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இறக்கும் மீனவர் பிள்ளைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் மற்றும் பல : சட்டசபையில் அமைச்சர் ஜெயபால் பேசியது
மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயபால் சட்டசபையில் நேற்று பேசியதாவது:
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.Wednesday, 25 April 2012
குருவாயூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு காதல் : பிடிபட்ட காதலர்கள் : இன்டர்நெட் தாக்கம்
இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏற்பட்ட நட்பால், நாகர்கோவில் மாணவியின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து மாதம் ஒருமுறை நள்ளிரவில் வந்து சென்ற மாணவர் சிக்கினார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரை எச்சரித்து அனுப்பினர்.
விலை ரூ 300 இல் தானாகவே 108க்கும் உறவினர்களுக்கும் தகவல் தரும் கருவி
விபத்தில் சிக்கினால் 108 மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தலா ரூ 1 கோடி நஷ்டஈடு : கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி கப்பல் நிறுவனம் வழங்கியது
கொல்லம் கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
Tuesday, 24 April 2012
தொடர் மதிப்பீட்டுமுறை அறிமுகம் : வரும் கல்வியாண்டு (1 - 8 வகுப்பு வரை)
நாடகம், குவிஸ், உரை யாடல் என்று பன்முக திறமையாளர்களாக மாணவ மாணவியர் விளங்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு முழு மை யான தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு : முறைகேடுகள் களையப்படுமா?
பேரவையில் நேற்று உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தகுதியான குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 4,20,747 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள 1,97,82,593 ரேஷன் கார்டுகளின் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி 1 கோடியே 93 லட்சத்து 3,509 கார்டுகள், அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புதுப்பிக்கப்பட்டன. 85,159 பேர் ஆன்லைன் மூலமும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 62,159 பேரும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துள்ளனர். 23,000 கார்டுகளின் பதிவுகள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் 4 லட்சத்து 16,925 கார்டுகள் புதுப்பிக்கப்படவில்லை.Monday, 23 April 2012
இண்டர்வியூ : (நாகர்கோவில்)பார்வதிபுரத்தில் விபசாரம் : 7 பேர் கைது
நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அந்த கட்டிடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியும் காவல்துறையினர் பெற்று இருந்தனர்.
‘செம்பட்டை’ : குளச்சல், குறும்பனை குப்பமா?? குப்பத்தின் பொருள் தான் என்ன???
இறந்த பின் உடலை புதைக்க தீவை வாங்கினார் ஆசிரியர்
இறந்த பின் தனது உடலையும், மனைவியின் உடலையும் புதைக்க இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் ஆசிரியர்.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது. இங்கு தண்ணீர், சாலைகள், மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால், யாரும் வாங்கவில்லை. இந்நிலையில், செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி, குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
மனித கழிவு கேஸ் : நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் : அசத்துகிறார் ஓய்வு பெற்ற பொறியாளர்
மனித கழிவில் இருந்து கேஸ் உற்பத்தி செய்து அதை பயன்படுத்தி சமையல் செய்து அசத்துகிறது ஓய்வு பெற்ற பொறியாளர் குடும்பம். நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் என்பது இதன் சிறப்பு. றார்
கோவை கே.வடமதுரை திரு.வி.க நகரை சேர்ந்தவர் செல்வன் (62). ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவர் எரிசக்தி நிறுவனம், ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இவர் மனைவி கிரிஜேஸ்வரி. செல்வன் பணி ஓய்வு பெற்றபின் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகி, மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உதவி கேட்டார். கேலி கிண்டலுக்கு பிறகு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர்.Saturday, 21 April 2012
ஆபாச நடனம் : ஐகோர்ட் உத்தரவு : பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை
ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3-ல் சென்னையில் துவங்கியது. அன்று இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனம் ஆடினர். நடனநிகழ்ச்சிகளின் போது பல போலீஸ் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.
இதை டிவி, பத்திரிகைகளில் பார்த்து பொதுமக்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனத்தை போலீசார் தடுக்காதது சட்டவிரோதம். இதற்காக இந்திய நடிகர்கள், பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இத்தாலி அரசு சமரசம் : 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு
இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு முன் வந்துள்ளது.
கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குமரி, கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், நஷ்டஈடு கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)








