குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
